ஜூலை மாதத்திற்கு 7 லட்சம் விண்ணப்பங்கள்! – பரபரக்கும் ரேஷன் கார்டு பணிகள்!
தமிழகத்தில் ஜூலை மாதத்திற்குள்ளாக புதிய ரேஷன் கார்டிற்கு 7 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதலாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கடந்த ஜூலை மாதத்திற்குள் மொத்தம் 7,19,895 பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவற்றை ஆய்வு செய்து 4,52,188 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ரேஷன் கார்ட் வழங்கும் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாகவும், 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.