ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மார்ச் 2025 (12:05 IST)

அமித்ஷா என நினைத்து சந்தானபாரதிக்கு போஸ்டர் அடித்த பாஜக!? - போஸ்டரால் கலகல!

amitshah Poster

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அமித்ஷாவுக்காக போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் சந்தானபாரதிக்கு போஸ்டர் ஒட்டிய சம்பவம் வைரலாகியுள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா இன்று மத்திய தொழிற்பாதுகாப்புப்படையின் ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக ராணிப்பேட்டையில் உள்ள CISF பயிற்சி மையத்திற்கு வருகை தந்துள்ளார். அவரது வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட பாஜகவினர் அவர் வரும் வழிகளில் போஸ்டர், பேனர்கள் அமைத்து அவரை வரவேற்க ஏற்பாடுகளை செய்தனர்.

 

அதில் ஒட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டர்தான் தற்போது வைரலாகியுள்ளது. ராணிப்பேட்டை பாஜகவினர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் படத்திற்கு பதிலாக சினிமா இயக்குனர், நடிகர் சந்தானபாரதியின் போட்டோ இடம்பெற்றுள்ளது, இது சமூகவலைதளங்களிலும் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.

 

ஆனால் இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள பாஜகவினர், தங்களுக்கு அமித்ஷாவிற்கும், சந்தானபாரதிக்கும் வித்தியாசம் தெரியும் என்றும், இது வேறு யாரோ பாஜகவினர் பெயரில் வேண்டுமென்றே ஒட்டிய போஸ்டராக இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்

 

Edit by Prasanth.K