Daily Horoscope
✕

கோலம் போட்டு கைதான பெண் ஒருவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பா? அதிர்ச்சி தகவல்

Updated: வியாழன், 2 ஜனவரி 2020 (10:16 IST)
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சமீபத்தில் சென்னையில் கோலம் போட்டதால் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவருக்கு பாகிஸ்தான் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு இருபப்தாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை பெசன்ட் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்தியதாக ஒருசில கல்லூரி மாணவிகள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ’ கோலம் போட்டதால் யாரும் கைது செய்யப்படவில்லை. அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு தகராறு செய்ததால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து இது தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார்.
 
மேலும் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்திரி கந்தாதே என்றும், இவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments