மீண்டும் இயக்கப்படும் ராமேஸ்வரம் - குமரி எக்ஸ்பிரஸ்: பொதுமக்கள் மகிழ்ச்சி
மீண்டும் இயக்கப்படும் ராமேஸ்வரம் - குமரி எக்ஸ்பிரஸ்: பொதுமக்கள் மகிழ்ச்சி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ராமேஸ்வரம் முதல் குமரி வரை செல்லும் விரைவு ரயில் நிறுத்தப் பட்டிருந்தது என்பது தெரிந்ததே.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதை அடுத்து இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தென்னக ரயில்வே கோரிக்கை விடுத்து வந்தனர்.
மக்களின் இந்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஜூன் 27ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது
தென்னக ரயில்வேயின் இந்த அறிவிப்பை அடுத்து அந்த பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.