புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (11:12 IST)

ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: குற்றவாளிகள் பிடிபடுவார்களா?

முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபயிற்சியின்போது கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க சிபிசிஐடி கடந்த 5 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தும் இன்னும் இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை


 
 
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற மதுரை ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.  சிபிசிஐடி விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் சிபிஐ விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த கொலை சம்பவத்தின் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.