1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 20 மே 2019 (18:33 IST)

’மதுபானம் பாதிப்பு குறித்து ராமதாஸ் அறிக்கை : அதிமுக அரசு பதிலளிக்குமா ?

மதுகுடிப்பதால் பெரும்பாலானவர்கள் உடல்நிலை பாதிப்பது, இறப்பது போன்றவை அதிகரித்து வருகிறது உலகில். ஆனாலும் மதுபானப் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
நம் இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது என்பது பாரட்டவேண்டிய ஒன்றாகும். ஆனால் தமிழகத்தில் வீதிக்கொரு மதுபானக் கடையை அரசே நடத்திவருகிறது.
 
இந்த  மதுபான விற்பனை ஒழிக்க வேண்டும். மதுவிலக்கை கொண்டுவர வேண்டுமென பலர் அரசை வலியுறுத்திவந்தனர். இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் தான் பெரிய அழுத்தம் கொடுத்து போராட்டங்களையும் முன்னெடுத்தது. தற்போது மக்களவைத் தேர்தலுக்காக ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது.
 
இந்நிலையில் மது அருந்துவதால் 200 வகையான நோய் எற்படும் என  பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் ஜெர்மனியில் உள்ள டி.யூ டிரெஸ்டன் பல்கலை கழகம் வாயிலாக நடத்தப்பட்ட அந்த ஆய்வானது இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 38 சதவீதம் அதிகரிதுள்ளதாகச் சுட்டிகாட்டுகிறது.
 
மதுகுடிப்பதால் சிறுது நேரம் போதைதான் தெரிகிறது ஆனால் 200 வகையான நோய்கள் தாக்குகிறது. அதனால் குடும்பங்கள் சீரழிகிறது.   வருவாய்க்காக ஆசைப்பட்டு மக்களின் வாழ்க்கையை அரசுகள் பறிக்கக்கூடாது. நாடுமுழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.
 
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது பாமக. இதன் தலைவரான  டாக்டர் ராமதாஸ் மதுவிலக்கு வேண்டுமென கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருக்கும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு  மதுவிலக்கு குறித்து  பரிசீலிக்குமா என்பது இனிப் போகப்போகத்தான் தெரியும் !