1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (22:06 IST)

மெரினாவில் இடம் கொடுங்கள் - கருணாநிதிக்காக கெஞ்சும் ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் தாருங்கள் என ரஜினி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். 
 
மெரினாவில் கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதான சாலை முகப்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய தயார் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த திமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் போராட்டம், நடத்தி வருகின்றனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. 
 
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கலைஞருக்காக வேண்டுகோள் விடுத்துள்ளார்.