திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (21:05 IST)

மரணம் இல்லாத மாவீரன் கலைஞர் கருணாநிதி

மரணம்  இல்லாத மாவீரன் கலைஞர் கருணாநிதி


ஏனென்றால் அவர்  கலைஞர் !
அந்த மரணத்தையே வென்றவர் ...!!!

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் மறையாது எப்போதும் பிரகாசிக்கும் திராவிட சூரியனுக்கு என்றும்  இல்லை அஸ்தமனம் !
தெள்ளுத்தமிழில் கவிப்பாடும் போதெல்லாம், 
அவர் துள்ளுத்தமிழ் உரை கேட்க்கும் போதெல்லாம் அவர் நம்முடன் வாழ்வார்.

ஒரு மனிதன்,இரு இதயங்கள்;
மாவீரன் இதயம் என்று செயல் இழந்து இருக்கிறது!
 அந்த மா மனிதனின் கோடி (உடன்பிறப்புகள்)  இதயத்துடிப்புகள்  துடிக்கும் போதேல்லாம் அவர் நம்முடன் வாழ்வார்.

கலைஞர் ஓர் தேவலோக தட்சன் !
அவர் படைப்புக்கள் ஆன வள்ளுவர் கோட்டம் ,138 அடி வள்ளுவர் சிலை, புதிய தலைமை செயலகம் , பல மேம்பாலங்கள்., அண்ணா நூற்றாண்டு நூலகம் இவை அனைத்தும் வாழும் வரை அவர் நம்முடன் வாழ்வார்.

கலைஞர் ஓர் மந்திர வாதி !
தமிழின் யாசகன்;   சமூக நீதியின் நேசன்;  அந்த மந்திர வாதி; அவர் செய்த மாயா ஜாலங்கள் தான்; பெண்களுக்கான சொத்து உரிமை சட்டம் ,சமச்சீர் கல்வி,    மகளிர் காவல் நிலையம், கைவண்டி ரிக்க்ஷா ஒழிப்பு, தமிழை அலுவலக மொழியாக்கல் ,சமத்துவபுரம், அரசு  விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து, சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கொடி ஏற்றும் உரிமை என பல சட்ட மற்றும் திட்ட செயல் வடிவங்கள். நேசனுக்கும், யாசனுக்கும், ஏது மரணம் ?

கலைஞரின் தாய் !
கர்ணனுக்கு ஒரு தாய் தர்ம தேவதை !
கலைஞருக்கு ஒரு தாய் சமூக நீதி தேவதை !
கலைஞரைப்போல ஒரு மாமனிதரை இனி எந்த நூற்றாண்டும் காணப்போவதில்லை.

பாரசக்திக்கு ஏது மரணம் ?
அவர் பவுடர் பூசிக்கொண்டு அரசியலுக்கு வந்தவர் அல்ல !
அவர் இந்திய சமூக நீதியின் அடையாளம் !

போராட்டங்கள்    தொடங்கி
காவேரி  தொடும் தருவாயில்
அவரின் ஒவ்வரு அசைவிலும் பூத்தன
லட்சம் புரட்சிப்பூக்கள்

கலைஞர் என்னும் பிரம்மன்  !
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைம்பெண்கள்  என பிரம்மன் பிழை செய்தான். அதை கலைஞர் சரி செய்தார். போராட சொன்னார்;  மானத்தை இழந்து மண்டி இட சொல்லவில்லை; 

 
கலைஞர் என்னும் கால சூரியன் !
கலைஞர் என்னும் கருத்துப்பெட்டகத்திற்க்கு,  கால சூரியனுக்கு ஏது மரணம் ?
பெரியாரின் வளர்ப்பிற்க்கு, அண்ணாவின் பாசறைக்கு ஏது மரணம் ?
கலைஞரின்  தமிழையும், உழைப்பையும், நாவன்மையையும்,தனித்தன்மையையும், செயல் ஆக்கும் தன்மையும் முன் எடுப்போம்.  

#kalaignarkarunanidhi
#karunanidhi
#DMK
இரா. காஜா பந்தா நவாஸ்
[email protected]