திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் - ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தொண்டர்கள் அனைவரும் கட்டுப்பாடு காக்க வேண்டும் என ஸ்டாலின் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்,
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை 6.10க்கு அவர் காலமானார்.
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக செயல் தலைவரும் கலைஞரின் மகனுமான ஸ்டாலின் திமுக தொண்டர்கள் கட்டுப்பாடு காக்க வேண்டும் என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.