திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் ஒருசில நாட்களில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அறிவிக்கவுள்ள நிலையில் அவர் ஒருசில ஆன்மீக தலைவர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் சற்றுமுன் திருவல்லிக்கேணி ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். எந்த ஒரு முக்கிய விஷயத்தை ஆரம்பிக்கும் முன் அவர் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மிக விரைவில் அவரது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் அதற்கு முன்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளை அவர் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளார்.