புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 மார்ச் 2018 (13:59 IST)

இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்

இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனதி 10 நாள் ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.
நடிகர் ரஜினிகாந்த புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி 234 தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே அரசியலில் இறங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் ரசிகர்களை சந்தித்து அரசியல் பிரவேசம் பற்றி ஆலோசனை நடத்தினார்.
 
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி ரஜினி ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்புகிறார்.
 
ரஜினி ஏப்ரல் 14-ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று புதிய கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். மேலும் கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளை வெளியிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.