வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (17:12 IST)

தேர்தலில் போட்டியில்லை: ரஜினி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரஜினி உட்பட அவரது கட்சி வேட்பாளர்கள் 234 பேர்கள் 234 தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்று தான் நேற்றுவரை அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த செய்தியின்படி திடீர் திருப்பமாக வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிட போவதில்லை என்றும், ஒருவேளை ரஜினி மக்கள் மன்றம் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைத்தால் அவர் முதல்வராகி அதன்பின் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் இது உத்தவ் தாக்கரே பாணி என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே கமலஹாசன் கட்சி ஆரம்பித்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் களம் இறங்குபவர்கள் தலைவரே போட்டியிடவில்லை என்றால் தொண்டர்கள் மிகுந்த மனச் சோர்வு அடைவார்கள் என்ற அடிப்படை விஷயம் கூட கமல், ரஜினிக்கு தெரியவில்லை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்
 
அதே நேரத்தில் ரஜினிகாந்த் போட்டியிட்டு ஒருவேளை தோல்வி அடைந்தால் அவரது சூப்பர் ஸ்டார் இமேஜ் பாதிப்படையும் என்பதால் தான் இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது.