1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (13:37 IST)

உள்ளாட்சி தேர்தல் வழக்கு : மரண அடி வாங்கியது அதிமுக தான் - மு.க. ஸ்டாலின் !

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் கடந்த 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கானதும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, தலைமை நீதிபதி பாப்டே, இந்த உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை எனவும், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில்  தெளிவுபடுத்த ஒன்றுமில்லை என கூறியிருந்தார்.
 
பின்னர், இதுகுறித்து தமிழக சட்டத்துறை  அமைச்சர் சி.வி சண்முகம், உள்ளாட்சி தேர்தல் வழக்கில் திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி கொடுத்துள்ளது என தெரிவித்தார்.
 
இதுகுறித்து ஸ்டாலின் இன்று கூறியதாவது :
 
திமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்ச நீதிமன்றம் பராட்டியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மரண அடி வாங்கியது அதிமுக தான் . அவசர கோலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த துடிக்கின்ற அதிமுகவுக்குப் பாடம் புகட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள வேட்பாளர்களை நிறுத்தி களமிறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.