திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (07:22 IST)

திமுக போய்விட்டால் ரஜினி-கமல்: காங்கிரஸின் பலே திட்டம்

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால், ஒருவேளை திமுக போய்விட்டால் அதற்கு ஈடுகட்ட ரஜினி மற்றும் கமல் கட்சிகளை கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே ரஜினியுடன் நல்ல நட்பில் இருக்கும் திருநாவுக்கரசர் திமுக இல்லாத கூட்டணியில் ரஜினி இடம்பெறுவார் என்ற நம்பிக்கையில் உள்ளார். அதேபோல் சமீபத்தில் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்த கமல், காங்கிரஸ் கூட்டணியில் சேருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதேபோல் திமுக கூட்டணியில் இருந்து விலகினால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என தினகரனும் அறிவித்துள்ளார். எனவே காங்கிரஸ் கூட்டணியில் திமுக விலகினால் கமல், ரஜினி, தினகரன், திருமாவளவன் ஆகியோர் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் அந்த கூட்டணி நிச்சயம் வலுவாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.