திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (11:44 IST)

அமெரிக்காவில் செட்டில் ஆக ராஜபக்சே ப்ளான்! – க்ரீன்கார்டு பெற முயற்சி!

இலங்கையிலிருந்து தப்பி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சே அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததால் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிபர் மாளிகை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.

இதனால் அங்கிருந்து தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு சென்று, பின்னர் அங்கிருந்து தாய்லாந்தில் அடைக்கலமானார். அங்கு அவர் பாங்காக்கில் உள்ள ஓட்டல் அறையில் சகல பாதுகாப்போடு தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர் மீண்டும் இலங்கை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜபக்சே குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அமெரிக்க அரசின் க்ரீன் கார்டு பெறுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.