Daily Horoscope
✕

சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

Written By Siva
Updated: வியாழன், 14 நவம்பர் 2024 (07:22 IST)
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில், மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு வலுவிழந்ததன் காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதுடன், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

நான் மிரட்டினேன்.. அதனாலதான் இந்தியா - பாகிஸ்தான் போர் நின்னுச்சு!.. அடங்காத டிரம்ப்!...

சும்மா ஆசைக்கு அரசியலுக்கு வரக்கூடாது!.. தனுஷுக்கு பேரரசு அட்வைஸ்!..

கொடுக்க முடியாது!.. மறுத்த பழனிச்சாமி!.. தனுஷ் டெல்லி போனதன் பின்னணி!...

கனமழை எச்சரிக்கை!.. கன்னியாகுமாரியில் சுற்றுலாத்தளங்களை மூட உத்தரவு!..

வரியை குறைத்த விஜய் - நன்றி தெரிவித்த இண்டிகோ

அடுத்த கட்டுரையில்
Show comments