வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (17:58 IST)

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

சூர்யா நடித்த ‘கங்குவா' திரைப்படம் நாளை மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் வெளியாவதற்காக தயாராக இருக்கும் நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் மேல் சில வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால், நீதிமன்ற உத்தரவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், இந்த படம் வெளியாவதில் சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், ஒவ்வொரு வழக்கையும் சமரசம் செய்து முடித்து, படத்தை வெளியிட தயாரிப்பாளர் தீவிரமாக முயற்சித்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ‘கங்குவா' படத்தை நாளை திட்டமிட்டபடி வெளியிட அனுமதி அளித்துள்ளது.

FUEL TECHNOLOGY என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 1.60 கோடியை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் செலுத்தியதுடன், மற்றொரு வழக்கில் ரூபாய் 6.40 கோடியை செலுத்திய நிலையில், மீதி தொகையை டிசம்பருக்குள் செலுத்துவதாக உறுதி அளித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, சூர்யாவின் ‘கங்குவா' படத்தை நாளை திட்டமிட்டபடி வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran