Daily Horoscope
✕

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

Updated: சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:40 IST)
தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், அந்த இரு மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  அதேபோல், அதன் தாக்கம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிளிலும் காணப்படுகிறது.
 
இதன் காரணமாக, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை உள்ளிட்ட சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments