இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை தான்..
ஜனவரி 5 ஆம் தேதி வரை தமிழகம் மற்ரும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. பின்பு மழை குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று காலை சென்னையில் புத்தாண்டு மழையுடன் தொடங்கியது.
இந்நிலையில் கிழக்கு மற்று மேற்கு திசை காற்று இரண்டும் சந்திப்பதால் தமிழகத்தில் மழை பெய்கிறது எனவும், ஜனவரி 5 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.