செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:26 IST)

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்து வருகின்றது. அதனால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.


பலதொழிலாளர்,தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. இது கோடைகாலம் என்பதல் வெயிலும் ஒருபக்கம் வாட்டி எடுககிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

மேலும் கோவை, நீலகிரி, மற்றும் வேலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.