வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:48 IST)

தமிழகத்தின் சில இடங்களில் மழை : மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் சில நாட்களாக சில இடங்களில் மழை பெய்துவருகிறது. வறண்ட வானிலையாக வெயிலில் வாடிய மக்களுக்கு மழை பெய்ததால் விவசாயிகள் உட்பட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தாலும் தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் வெய்யில் தாக்கம் அதிகமாக இருந்தது.
 
அதேசமயம், விருதுநகர், ராஜபாளையம், உள்ளிட்ட கிராமப் பகுதிகள் பரவலான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் தூரல் மட்டும் இருந்தது, காஞ்சிபுர மாவட்டத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து, பூமியை குளிர்வித்தது. இதனால் பூமியில் நீர்வளம் பெருகும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,