சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
சென்னையின் முக்கிய பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காற்று திசை வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நேற்று முதல் அவ்வப்போது சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் தற்போது சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையின் எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
விநாயகர் சதூர்த்தி விடுமுறை முடிந்து இன்று தான் பொதுமக்கள் மீண்டும் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை முதலே மழை பெய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது