1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified புதன், 31 ஆகஸ்ட் 2022 (15:43 IST)

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், வட மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில்  4 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில்,தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமா, நீலகிரி, தேனி, கோவை மற்றும் தென் காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், தர்மபுரி, கரூர், ஈரோடு, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.

நாளை  நீலகிரி, தேனி, திருப்பூர், சேலம், பெரம்பலூர், திரு நெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.