1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2023 (08:10 IST)

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
மேலும் அக்டோபர் மூன்றாவது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva