1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 மே 2024 (08:27 IST)

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

Chennai Rain
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போலவே சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருவதை அடுத்து சென்னை மக்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பித்துள்ளதாக தெரிகிறது.

சென்னை எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா சாலை உள்பட சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாகவும் காலையில் இருந்தே கருமேகங்களுடன் வானம் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் சோழிங்கநல்லூர், நீலாங்கரை, சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கடந்த சில நாட்களாக சென்னையில் படு மோசமாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளது சென்னை மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

மேலும் சில நாட்கள் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சீக்கிரமே தொடங்கிவிடும் என்பதால் கோடை வெப்பத்திலிருந்தும், அக்னி நட்சத்திர வெயிலில் இருந்தும் பொதுமக்கள் விடுதலை அடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva