தமிழகத்தில் இன்றிரவு 27 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, புதுகோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 27 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Edited by Mahendran