வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 3 மே 2023 (13:50 IST)

தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 
 
கடலூர் கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் திருவண்ணாமலை திருச்சி விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்து வரும் நிலையில் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாக இருக்கும் நிலையில் இன்று மழை பெய்து வருவது பொது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
 
Edited by Siva