ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (13:03 IST)

அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்குமா? சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நிலவரம் குறித்த அறிவிப்பு ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது
 
கடந்த சில நாட்களாக திடீர் திடீரென சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அதேபோல் சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தாலும் பெரிய மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
பொதுவாக தமிழகம் முழுவதும் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை இல்லை என்ற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது