1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (08:09 IST)

நாகா்கோவில்-சென்னை வாராந்திர ரயில் சேவையில் மாற்றம்

நாகர்கோவில் இருந்து சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூரக்கு மாலை 4.15 மணிக்கு கிளம்பும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இனி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இனி தாம்பரம் ரயில் இருந்து இரவு 7.15 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் என்றும் தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.