திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 நவம்பர் 2023 (13:39 IST)

இன்னும் சில மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இன்னும் சில மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்றும் இன்றும் சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.
 
Edited by Siva