வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 நவம்பர் 2023 (12:28 IST)

சென்னையில் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு என்ற அறிவிப்பு சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு என்ற முறை வரும் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதால் இனி புதிதாக வீடு கட்டுபவர்களுக்கும், குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடு கட்டுவது மட்டுமின்றி கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கட்டடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

 இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பதும் கட்டண உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Siva