வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2021 (14:05 IST)

மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!

இன்று பொங்கல் திருவிழாவை தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மதுரை வந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
அவர் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து பார்த்தார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் அவர் மதுரை மக்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதாக தகவல்களிள் வெளிவந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரை தென்பலஞ்சி என்ற பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டதாகவும் இதனையடுத்து அந்த பகுதி பொது மக்களோடு அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்
 
தேர்தல் வந்துவிட்டாலே அரசியல்வாதிகள் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து பழகுவார்கள் என்பது தெரிந்ததே அந்த வகையில் இதுவும் தேர்தல் நாடகமா அல்லது உண்மையாகவே மதுரை மக்களின் அன்புக்கு கட்டுப்பட்டு அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்