வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 7 ஜனவரி 2021 (10:56 IST)

மீண்டும் தேஜஸ் ரயில் இயக்க அனுமதி: கூட்டமில்லை என சமீபத்தில் ரத்து

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை முதல் மதுரை வரை தேஜஸ் சிறப்பு ரயில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த ரயில் சென்னையில் இருந்து கிளம்பி திருச்சி மற்றும் கொடைரோடு ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டும் நின்று மதுரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தேஜஸ் ரயிலில் கட்டணம் அதிகமாக இருந்ததால் அதாவது கிட்டத்தட்ட விமான கட்டணத்தின் அளவில் இருந்ததால் பொது மக்களிடையே வரவேற்பு இல்லாமல் இருந்தது. எனவே சென்னை மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் ஜனவரி 4 முதல் ரத்து என ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. ஆனால் ரயில்வே துறையின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. மீண்டும் இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் தேஜஸ் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 10ஆம் தேதி முதல் சென்னை-மதுரை தேஜஸ் ரயில் இயங்கும் என்றும், வியாழன் தவிர வாரத்தின் ஆறு நாட்களும் தேஜஸ் ரயில் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.