1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2024 (16:53 IST)

இனிப்பு வாங்கி கொடுத்த ராகுல்..! சகோதரரின் செயலால் நெகிழ்ச்சி..! மு.க ஸ்டாலின் ட்வீட்..!!

Ragul Gandhi
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக கோவையில் ராகுல் காந்தி சாலையை கடந்து சென்று இனிப்பு வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
கோவை செட்டிப்பாளையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நேற்று மாலை நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகை புரிந்திருந்தார். முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பதற்கு முன்பாக கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள ஓர் இனிப்பு கடையில் இருந்து முதலமைச்சருக்கு வழங்குவதற்காக மைசூர் பாக்-னை காசு கொடுத்து வாங்கினார்.
 
இந்த வீடியோ காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி இனிப்பை மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார் என்ற கேப்சனுடன் பதிவிடப்பட்டிருந்தது.


இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்!. என் சகோதரரின் செயலால் நான் நெகிழ்ச்சியடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஜூன் 4 ஆம் தேதி இந்தியா அவருக்கு இனிப்பான வெற்றியைத் தரும்” என்ற கேப்சனுடன் பகிர்ந்துள்ளார்.