6-12 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி காலாண்டு தேர்வு பொது தேர்வாக நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைகிறது.
அதேபோல் 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. .
Edited by Mahendran