ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னரும் தூத்துகுடியில் அதே மாசு: ஆர்.டி.ஐ தகவல்
தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் அந்த ஆலையால் சுற்றுப்புறச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், காற்றின் மாசு அளவு அதிகரித்து உள்ளதாகவும் அரசியல் கட்சிகள் போராடின. இதனை அடுத்து அந்த பகுதி மக்களும் சேர்ந்து போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் விபரீதமாக மாறி துப்பாக்கிச்சூடு நடந்து அதில் சிலர் உயிரிழந்த பரிதாபமான சம்பவங்களும் நிகழ்ந்தன
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தூத்துக்குடியில் காற்றின் மாசு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து ஆர்டிஐ ஒரு தகவலை தெரிவித்துள்ளது
தூத்துக்குடி ஆலை இயங்கி கொண்டிருந்த போது காற்றின் மாசு எந்த அளவுக்கு இருந்ததோ அதே அளவு தான் தற்போதும் உள்ளது என ஆர்டிஐ தகவல் அளித்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தவிர இன்னும் ஒரு சில ஆலைகள் இயங்கி கொண்டு வருவதாகும், ஸ்டெர்லைட் விட அதிகமாக அந்த ஆலைகளால் தான் காற்றின் மாசு பாதிக்கபடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்
ஆனால் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளின் ஒரே இலக்காக ஸ்டெர்லைட் ஆலை மட்டும் இருந்ததால் அந்த ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய அரசியல்வாதிகள் மற்ற ஆலைகளை மூட போராட்டம் நடத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்