செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (21:30 IST)

காகித ஆலை நிறுவனத்தின் கழிவு நீர் திறந்து விடுவதால் விவசாயம் பாதிப்பு :விவசாயிகள் குற்றச்சாட்டு

பயன்படுத்தும் வாய்க்காலில்  தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் கழிவு நீர் திறந்து விடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக  விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

ஈரோடு மாவட்டம் கார்ணபாளையத்தில் இருந்து கரூர் மாவட்டம் நெரூர் வரை சுமார் 15  ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு புகளுரான் ராஜ வாய்க்கால் பயன்பட்டு வருகிறது.

தற்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் தனது கழிவு நீரை இந்த வாய்க்காலில் இரவு நேரத்தில் திறந்து விடுகின்றனர்.

இதனால் வாய்க்காலில் தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றத்துடன் செல்லுகிறது .இந்த பாசன வாய்க்காலை பயன்படுத்தும் விவசாயிகள் கழிவு நீரை பயன்படுத்த முடியாமலும் விளை பாதிக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் மீது குற்றசாட்டினார்க்ள.மேலும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் கழிவுநீரை சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.