புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:24 IST)

புதுச்சேரியில் பள்ளி சென்ற மாணவனுக்கு கொரோனா! – தொடர்ந்து நடக்கும் வகுப்புகள்!

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவன் ஒருவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த சூழலில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளான். பின்னர் அப்பகுதியில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்தபோது அந்த மாணவனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

அதை தொடர்ந்து மாணவனுடன் படித்த சக மாணவர்கள் 15 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் பள்ளியில் அட்மிசன் பணிகளும், பிற சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவன் படித்த வகுப்பறை மட்டும் மூடப்பட்டுள்ளது.