மேகதாது அணை விவகாரம்; எதிர்ப்பு தெரிவிக்கும் புதுச்சேரி அரசு?
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசை தொடர்ந்து புதுச்சேரி அரசும் மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்திய தமிழக அரசு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அணை கட்ட எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் “மேகதாதுவில் அணை கட்டினால் காரைக்கால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மேகதாது அணை கட்டக்கூடாது” என்று வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுத புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.