ஆகஸ்ட் 31 வரை புதுவையில் ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் ஆகஸ்ட் 31 வரை ஈரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தை போலவே புதுவையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில வாரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது
அதுமட்டுமின்றி ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தளர்வுகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது