சென்னை மற்றும் கோவையில் ஊரடங்கா? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த வருடம் சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது. இத்தொற்றின் முதல் அலை முடிந்த நிலையில் தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்றுப் பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து அங்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனிடையே தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ஆம், தமிழ்நாட்டில் தளர்வுகளை நீட்டிக்கலாமா அல்லது குறைக்கலாமா என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அதிகரிக்கும் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.