கவர்மெண்ட் பஸ்ல போனவங்களுக்கு ஸ்வீட்!! ஆச்சரியப்படுத்தும் போக்குவரத்து ஊழியர்கள்!!

Arun Prasath| Last Updated: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (12:35 IST)
அரசு பேருந்தில் பயணிக்க வலியுறுத்தும் வகையில் புதிய பேருந்து நிலையம் வரும் பயணிகளுக்கு புதுக்கோட்டை போக்குவரத்து கழக ஊழியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் பெரும்பாலும் தனியார் பேருந்துகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராமேஸ்வரம், மதுரை, காரைக்குடி, ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் தனியார் பேருந்துகளையே அதிகளவில் நாடுகிறார்கள் என கூறலாம்.

இந்நிலையை மாற்ற வேண்டும் என திட்டமிட்ட புதுக்கோட்டை போக்குவரத்து மண்டல அலுவலர்கள், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வரும் பயணிகளுக்கு அரசு பேருந்துகள் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை விளக்கி பயணிகள் அரசு பேருந்தை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் அரசு சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறித்தும் பயணிகளுக்கு ஊழியர்கள் எடுத்துக்கூறினர். அதன் பின்பு இனிப்புகள் வழங்கி கைகொடுத்து பயணிகளை வரவேற்றனர். இதனை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். போக்குவரத்து ஊழியர்களின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :