திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (13:03 IST)

சபரிமலைக்கு சென்ற புதுவை இளைஞருக்கு ரூ.20 கோடி பரிசு.. தேடி வந்த அதிர்ஷ்டம்..!

Lottery
புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சபரிமலைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 20 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று உள்ளார்

புதுச்சேரியை  சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் சபரிமலைக்கு சென்றார். அவர் ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது லாட்டரி கடை ஒன்றை பார்த்து அங்கு கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார்
 
இதனை அடுத்து அவர் வீட்டுக்கு வந்த நிலையில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ஆன 20 கோடி ரூபாய் விழுந்திருப்பதாக தகவல் வெளியானது.  இதனை அடுத்து அவர் இன்ப அதிர்ச்சியடைந்து உடனடியாக லாட்டரி சீட்டு கடையை தொடர்பு கொண்டு தனக்கு பரிசு விழுந்ததை உறுதி செய்துள்ளதை அடுத்து அவர் நேரில் சென்று பரிசை பெறுவதற்காக சென்றார்

அப்போது அவரை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்த நிலையில் தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு ’தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த பணத்தை வைத்து குடும்பத்தினருக்கு தேவையானதை வாங்கி கொடுப்பேன் என்றும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வேன் என்றும் கூறியுள்ளார்

சபரிமலைக்கு சாமி கும்பிட சென்றவருக்கு 20 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran