மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்திய அரசுப்பள்ளி ஆசிரியை.
அப்துல்கலாம் நினைவு நாளில் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு முதலில் தன் பள்ளியை பசுமையாக்கிட மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்திய அரசுப்பள்ளி ஆசிரியை.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவுதினம் 6வது ஆண்டாக நேற்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில் என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர் என்பதனை, அவரது திருவுருவப் படத்திற்கு முன்பு அஞ்சலி செலுத்தி நினைவு கொண்டனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், கொடையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆசிரியை ராஜகுமாரி, இவர் கடந்த 9 வருடங்களாக பணியாற்றி வரும் நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே இயற்கையை பேணிட, மரங்களை உருவாக்கும் முயற்சியில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்துள்ளார். இவருடைய முயற்சியில் இந்த பள்ளியில் மட்டும் 12 மரங்கள் நடப் பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் பள்ளிக்கு சென்ற இவர், மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், டாக்டர் அப்துல் கலாம் ஆகியோருக்கு செம்பருத்திப் பூக்கள் கொண்டு அலங்காரம் செய்து, டாக்டர் அப்துல்கலாம் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை சூட்டி வணங்கினர், பள்ளி தலைமையாசிரியர் ஜாபரீன், பள்ளி அருகில் உள்ள மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். பின்னர் பள்ளி வளாகத்தை சுற்றி ஆறு மரக்கன்றுகளை நட்டு அப்துல் கலாம் அவர்களின் நினைவினை நினைவு கூர்ந்தார். ஆங்காங்கே உள்ள அரசு பள்ளிகளில் இவரைப்போல மரக்கன்றுகளை நட்டு நாளைய மனிதனுக்கு சுவாசம் கொடுக்க முயற்சிக்கலாமே என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
மேலும் அப்துல் கலாம் அவர்களை நினைவு தினத்தையொட்டி இந்த ஆசிரியை செய்த நற்பணி தொடர வேண்டும் என்றதோடு, மேலும் அவர் முதலில் என் பள்ளி முழுவதும் உள்ள வளாகத்தில் இந்த ஆண்டு மரக்கன்றுகளை அதிக அளவில் நடுவது நிச்சயம், எனது பள்ளியை சார்ந்த ஊரினை முழுவதுமாக பசுமையாக்கிடுவது லட்சியம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட இவருக்கு இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், முன்னாள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஆதரவு உண்டு என்கின்றனர் இப்பகுதி மக்கள்.