வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 28 ஜூலை 2021 (23:40 IST)

காமெடி கதாப்பாத்திரங்கள் வலிமையானது – யோகிபாபு

தமிழ் சினிமாவில் முன்னணிக் காமெடி நடிகரான யோகிபாபு தன் காமெடி அனுபவம் குறித்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அரண்மனை, பரியேறும் பெருமாள், கோலமாபு கோகிலா  போன்ற படங்களில் நடித்துள்ளவர் யோகிபாபு. இவர் தற்போது, விஜய்யுடன் பீஸ்ட், அஜித்துடன் வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மண்டேலா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முதன்முறையாக பயம்ம் அருவருப்பு, காதல், அமைதிக் ஆச்சர்யம், கருணை, தைரியம் மற்றும் கோபம் உள்ளிட்ட 9 உணர்வுகளை மையமாகக் கொண்டு 9 கதைகள் இணைந்த ஆந்தாலஜி படமாக நவரசா உருவாகியுள்ளது. இதில் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆக்ஸ்ட் 6 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், நவரசா படம் குறித்து யோகிபாபு கூறியதாவது:

தமிழ் சினிமாவில் நடிகர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர்ட் காமெடியில் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்தனர். இதேபோல் என் திறமையை வாய்ப்புக் கிடைக்கும்போது வெளிப்படுத்த ஆசைப்படுகிறேன்.  சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாபாத்திரங்களை எல்லோராலும் நடித்துவிட முடியாது. அது வலிமையானது. மனிதனின் 9 உணர்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நசரசா படத்தில் ஒரு கனமான பாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என உருக்கமாகப் பேசினார்.