வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2024 (13:50 IST)

டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்- டாஸ்மார்க் திறக்கப்படாது அதிகாரி தகவல்!

மதுரை கள்ளிக்குடி அருகே புதிய டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பொதுமக்கள் மூன்று அரசு பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் துணை மேலாளர் சையத் முகமது, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அருள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடை இங்கு திறக்கப்படாது என உறுதி அளித்ததன் அடிப்படையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.