ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (20:24 IST)

தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்களில் தமிழ்: அமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் வங்கி படிவங்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம் மற்றும் வங்கி படிவங்களில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் என்றும் வங்கிகளில் ஹெல்ப்லைன் சேவைகளில் உள்ள அதிகாரிகள் தமிழ் மொழி அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல்ராஜன் வங்கிகளில் தமிழ்மொழி கட்டாயம் இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது