புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது என்பதும் இதுவரை கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாகவும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான இடங்களிலும் சென்னையில் மட்டும் 160 இடங்களிலும் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாகவும் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முன் களப்பணியாளர்கள் இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது
 
2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என ஏற்கனவே சுகாதார துறை அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது