1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (17:14 IST)

பள்ளிகளில் பி.டி. பீரியட் தொடங்க அனுமதி: மாணவர்கள் மகிழ்ச்சி!

பள்ளிகளில் பி.டி. பீரியட் தொடங்க அனுமதி: மாணவர்கள் மகிழ்ச்சி!
பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பி.டி. பீரியடு தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
பள்ளிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்பயிற்சி பாடத்திட்டம் என்று கூறப்படும் பிடி பீரியட் நிறுத்தப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் உடற்பயிற்சி பாடத் திட்டத்தை தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது
 
ஆனால் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவிருப்பதால் பிடி பீரியட் அனுமதி இல்லை என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.