திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (12:27 IST)

மிக்ஜாம் புயல் எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா?

cyclone
மிக்ஜாம் புயல் காரணமாக தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் நாளை அல்லது நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றும் உரிய நேரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கேள்வி ஒன்றுக்கு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

மேலும் அத்தியாவசிய பணிகள் உள்ள துறைகள் தவர மற்ற துறைகளுக்கு அரசு விடுமுறையும் அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  

மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பலத்த காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அதேபோல் தாழ்வான பகுதிகள் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாறிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva